ஆசிய சதுரங்க போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த சர்வாணிகாவை பாராட்டி, வாழ்த்தினார் இலங்கை பிரதமர் திரு.தினேஷ் குணவர்தன அவர்கள். இலங்கையில் இந்த மாதம் 3ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற்ற ஆசிய சதுரங்க போட்டியில் மூன்று பிரிவுகளில் (under7 rapid 7சுற்றுகள், blitz7சுற்றுகள், standard 9சுற்றுகள்) கலந்து கொண்டு,மொத்தம் 23 சுற்றுகளிலும் முழுமையான வெற்றிகளை பெற்று,
மூன்று தங்க பதக்கங்கள் மற்றும் அணிக்கான தங்கம் உட்பட 6 தங்க பதக்கங்கள் மற்றும் 5 கோப்பைகளை வென்று ஆசிய சதுரங்க போட்டியில் புதிய சாதனை படைத்த, அரியலூர் மாவட்டம் ஜெமீன் ஆண்ட உடையார்பாளையம் தாலுகா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (மேற்கு) மாணவி நமது இந்திய சதுரங்க வீராங்கனை சர்வாணிகாவை இலங்கை பிரதமர் திரு.தினேஷ் குணவர்தனே அவர்கள் மகிழ்ந்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.