சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படுமா என கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்து உள்ளார். சுனிதா வில்லியம்ஸ் , புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கி இருந்த நிலையில் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் கடந்த 19ம் தேதி பூமி திரும்பினர். பூமி திரும்பிய அவர்களுக்கு எவ்வளவு பணம் சம்பளமாக கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் அமெரிக்க அரசின் ஊழியர்களுக்கான பொது பட்டியலில் ஜி.எஸ்., – 15 என்ற நிலையில் உள்ளனர். எனவே அவர்களுக்கு சம்பளமாக தலா ரூ.82 லட்சம் முதல் 1.06 கோடி வரையிலும், அதனுடன் 286 நாட்கள் விண்வெளியில் இருந்ததால் கூடுதலாக தலா .1லட்சத்தி,22 ஆயிரத்து,989 ரூபாய் பணமும், கிடைக்கும் என தகவல் கூறுகின்றன.இது தொடர்பாக கேள்விக்கு டிரம்ப் கூறியதாவது: அவர்களுக்கான சம்பளம் குறித்து என்னிடம் யாரும் கூறவில்லை. அப்படி கூறியிருந்தால், நான் எனது சொந்த பணத்தை அவர்களுக்கு கொடுத்து இருப்பேன் என கூறியுள்ளார்.
