ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் பணி; விண்ணப்பங்கள் விநியோகம் ஆரம்பம்

இந்தியா கலை / கலாச்சாரம் செய்திகள் தமிழர் விளையாட்டு தமிழ்நாடு திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் நிகழ்வுகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் பணிக்காக கால்நடைத்துறை சார்பில் புகைப்பட அடையாளச் சான்று விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் மற்றுடன் புகைப்படம் ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர் உறுதிமொழி வழங்க கால்நடைத்துறை விண்ணப்பம் வெளியீடு.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வரும் காளைகளின் உரிமையாளர்கள் நடப்பு 2024 ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு மாடு மற்றும் நாட்டின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் உடன் கூடிய புதிய புகைப்படமும் ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு போதை வஸ்துகள் தரமாட்டேன் மற்றும் துன்புறுத்த மாட்டேன் என்று உறுதிமொழி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகள் விரைவில் துவங்க உள்ள நிலையில் கால்நடைத்துறை சார்பில் வெளியிட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் ஜல்லிக்கட்டு காளைகளை தரப் பரிசோதனை செய்வது அவசியம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு 2024 ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு பல்வரிசை, கொம்புகளின் இடையே உள்ள தூரம், வலது- இடது கொம்புகளின் உயரம், உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க தகுதி உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *