பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஜோர்டான் சென்றார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த அரசு முறை சுற்றுப்பயணம் மொத்தம் 4 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 3 நாடுகளை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.சுற்றுப்பயணத்தின் முதல் நாளில் அவர் ஜோர்டான் சென்றடைந்தார். ஜோர்டான் பயணத்தை முடித்த பின்னர், பிரதமர் மோடி எத்தியோப்பியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு செல்ல உள்ளார். இந்த பயணம் இரு நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

