வாஷிங்டன் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, சாலைகள் சேதமடைந்துள்ளன. பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், சில வீடுகள் இடிந்து விழுந்து, சில வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.சியாட்டில் அருகே பாயும் ஸ்காகிட் ஆற்றில் அபாய அளவை மீறி வெள்ளம் ஓடுவதால், விவசாய பகுதிகளில் வசிக்கும் 78,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து வாஷிங்டன் கவர்னர் பாப் பெர்குசன் உள்ளூர் அவசரநிலையை அறிவித்துள்ளார். அதேபோல், ஸ்னோஹோமிஷ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஒரு பாலம் சேதமடைந்துள்ளது. அமெரிக்கா–கனடா எல்லைக்கு அருகிலுள்ள சுமாஸ், நூக்சாக் மற்றும் எவர்சன் நகரங்களும் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மேலும் கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

