பாரீஸில் இளவரசி டயானாவின் புதிய மெழுகு சிலை திறப்பு.

அரசியல் உலகம் சிறப்பு சுற்றுலா செய்திகள் பெண்கள் முதன்மை செய்தி

உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் மனதை தன் இளம் வயதிலேயே கவர்ந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் மெழுகு சிலை, பிரான்சின் புகழ்பெற்ற க்ரெவின் (Grévin) மெழுகு அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது.1997ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்த டயானாவின் 30ஆம் ஆண்டு நினைவு நிகழ்வை முன்னிட்டு இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதில், அவர் Revenge Dress அணிந்த தோற்றம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.1882ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட க்ரெவின் அருங்காட்சியகத்தில், உலகப் புகழ்பெற்றவர்களின் 300-க்கும் மேற்பட்ட மெழுகு சிலைகள் உள்ளன. இப்போது சேர்க்கப்பட்டுள்ள டயானாவின் சிலை, பாரீஸில் உள்ள அவரது நினைவு இடங்களுடன் இணைந்து, அவரின் நினைவுகளை மேலும் உயிர்ப்பித்து வருகிறது.இந்த புதிய டயானா சிலையை காண ரசிகர்கள் பலரும் பாரீஸுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். டயானாவின் அழகும் தைரியமும் மீண்டும் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *