ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து சிறப்பு அரசு விமானத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரை இன்று சென்றடைந்தார். இந்த ஆண்டு நடைபெறும் ஜி20 நாடுகளின் தலைவர்களின் 20வது உச்சி மாநாடு ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை தொடங்குகிறது. இதனால் உலகின் முக்கிய நாடுகளின் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டு, உலக பொருளாதாரம், வளர்ச்சி, தொழில்நுட்ப மாற்றங்கள், சர்வதேச நட்பு உறவுகள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.இந்தியாவின் வளர்ச்சி திட்டங்கள், உலகளாவிய தெற்கு நாடுகளின் நலன், வளர்ந்து வரும் நாடுகளுக்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி போன்ற விஷயங்களில் பிரதமர் மோடி தனது கருத்துகளை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், பல நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளும் நடைபெற வாய்ப்பு உள்ளது. உலக அரசியல் சூழ்நிலை பரபரப்பாக இருக்கும் இந்த நேரத்தில் நடைபெறும் ஜி20 மாநாடு சர்வதேச அளவில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.

