நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த கூலி படத்துடைய அப்டேட் இன்று வெளிவந்துள்ளது. அதாவது படத்தில் ரஜினியுடைய கேரக்டர் என்ன என்பது குறித்து பட குழுவினர் அப்டேட் வெளியிட்டுள்ளனர்.
ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் 650 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்துடைய 2-ஆம் பாகம் விரைவில் படமாக்கப்பட உள்ளது. ஜெயிலர் 2 படத்துடைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என இயக்குனர் நெல்சன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
ஜெயிலர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கம் கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். தனது வித்தியாசமான மேக்கிங்கால் ரசிகர்களின் பாராட்டுகளையும், நம்பிக்கையையும் லோகேஷ் கனகராஜ் பெற்றுள்ளார். இதனால் அவரும் ரஜினிகாந்த் இணையும் கூலி படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் கூலி படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில் கூலி படத்தில் இடம்பெற்றுள்ள முன்னணி நடிகர்களின் கேரக்டர் போஸ்டர்கள் கடந்து சில நாட்களாக வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரஜினிகாந்தின் கேரக்டர் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் தேவா என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளது. தற்போது வெளியாகி உள்ள கூலி படத்துடைய புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

