நடிகர் விஜய் நடிக்கும் The Goat தமிழ் திரைப்படம் உலகெங்கிலும் 5000 திரையரங்குகளில் பிரம்மாண்டமாய் வெளியாகிறது

இசை இந்தியா உலகம் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

உலகம் முழுவதும் விஜய்யின் ‘கோட்’ படம் கிட்டத்தட்ட 5000 திரைகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளது. இது விஜய் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் முதல் படமாகும். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.
இந்த திரைப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது. இந்த சூழலில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் 4-வது பாடலான ‘மட்ட’ பாடல் நேற்று முன்தினம் வெளியானது. இப்பாடல் இணையத்தில் வைரலானது. இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி உள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் புரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முதல்நாள் முதல் காட்சிகளைப் பார்க்க பலரும் போட்டிபோட்டு கொண்டு டிக்கெட் வாங்கி வருகின்றனர்.
முக்கியமாக, கேரளத்தில் இதுவரை டிக்கெட் முன்பதிவு வாயிலாகவே இப்படம் ரூ. 1.50 கோடியை ஈட்டியுள்ளது. மேலும், கேரளத்தில் மட்டும் முதல்நாளில் 700 திரைகளில் 4000 காட்சிகளுடன் கோட் வெளியாகிறது. இதுவே, கேரளத்தின் இதுவரையிலான மிகப்பெரிய வெளியீடு என அப்படத்தின் கேரள உரிமம் பெற்ற ஸ்ரீகோகுலம் மூவிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 1100 திரைகளிலும் வடமாநிலங்களில் 1000 திரைகளிலும் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என கிட்டத்தட்ட 5000 திரைகளில் கோட் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதால் கோட் முதல் நாளில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என்றே தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *