தீபாவளிக்கு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்; இயக்குநர், நடிகர் எஸ்.ஜே. சூர்யா வை குறிப்பிட்டு செய்தி

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தினை பாராட்டினை அதன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்திருக்கும் திரைப்படம், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்”. இந்த படத்தை ஸ்டோன் பென்ஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. முன்னதாக, கடந்த 2014ஆம் ஆண்டு சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைத் தேடி தந்தது. தேசிய விருதுகள் உள்பட பல விருதுகள் இப்படத்திற்கு கிடைத்தன.
இந்நிலையில், 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி உள்ளார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பேசப்படும் என ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு வாழ்த்து தெரிவித்து எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது..
” ஜிகர்தண்டா XX படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு, வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள். ‘லாரன்ஸால்’ இப்படியும் நடிக்க முடியுமா..? என்ற பிரம்மிப்பை நமக்கு உண்டாக்குகிறது. ‘S. ). சூர்யா’ இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லதனம், நகைச்சுவை குணசித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தி இருக்கிறார்.
திருவோட கேமிரா விளையாடி இருக்கிறது.
கலை இயக்குனரின் உழைப்பு பாராட்டிற்குரியது. ‘திலீப் சுப்ராயனின்’ சண்டை காட்சிகள் அபாரம். ‘சந்தோஷ் நாராயணன்’ வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமாக இசை அமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்திற்கு உயிரூட்டி, தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார்.
இந்த படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக எடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு என்னுடைய தனி பாராட்டுகள். படத்தில் வரும் பழங்குடிகள் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள். நடிகர்களுடன் போட்டி போட்டு கொண்டு யானைகளும் நடித்து இருக்கின்றன. செட்டானியாக நடித்து இருக்கும் விது அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அற்புதம்.
இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மக்களை கைதட்ட வைக்கிறார். பிரமிக்க வைக்கிறார். சிந்திக்க வைக்கிறார். அழவும் வைக்கிறார். I am proud of you கார்த்திக் சுப்புராஜ். My hearty congratulations to கார்த்திக் சுப்புராஜ் And Team ” என ரஜினிகாந்த் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *