மக்கள் சந்தித்து வரும் சில முக்கியமான அடிப்படைப் பிரச்சனைகளில் அதியாவசியப் பொருட்களின் விலை உயர்வு முதன்மையான பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது. கடந்த சில வருடங்களாகவே அத்தியாவசியத் தேவைகளான காய்கறிகள், எண்ணெய், பருப்பு வகைகளின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் நடுத்தர மக்களையே பெரிதும் பாதித்திருக்கிறது.
காய்கறிகள் விலை அதிகரிக்க முக்கியமாக சொல்லப்படும் காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு. பெருநகரங்களின் காய்கறிகள் மற்றும் இதர சமையல் தேவைக்கான அனைத்துப் பொருட்களையும் சரக்கு லாரிகளே கையாளுகின்றன. டீசல் விலையேற்றம் மற்றும் சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணம் போன்றவைகள் காய்கறிகளின் விலையேற்றத்தில் பிரதிபலிக்கின்றன. இதுமட்டுமல்லாது இயற்கை மாற்றங்களும் இதில் பெரும் பங்கு வகிக்கின்றது. ஆண்டுதோறும் பெய்யும் பருவமழை சில வருடங்களாக அதிகப்படியாக பெய்வதால் விளைநிலங்களில் பயிரிடப்படும் பயிர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைவு காரணமாக சந்தைக்கு வரும் பொருட்களின் அளவும் குறைந்து வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்கிறது. காய்கறிகளில் அன்றாடம் தேவைகளான தக்காளி, வெய்காயம், மிளகாய் போன்றவைகளின் விலை மாற்றம் அதிகம் மக்களை வாட்டிவதைக்கிறது. கடந்த காலங்கிளில் தக்காளி மற்றும் வெங்காயம் இவ்விரண்டின் விளச்சல் தட்டுபாட்டால் ஒரு கிலோவின் விலை நூறு ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்பட்டு நடுத்தர மக்களை கவலையில் ஆழ்த்தியது.
சமீபத்தில் பெய்து வரும் தென் மேற்கு பருவமழையின் காரணமாக மிளகாய விளைச்சல் குறைந்து சந்தைக்கு வரும் மிளகாய் வரத்தும் குறைந்து 100-200 ரூபாய் க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தற்போது 300-400 வரை விற்கப்படுகிறது. இரு மடங்கு உயர்ந்த விலையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.