குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது குறித்து எச்சரிக்கை வாசகம் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் (ஹைகோர்ட்) உத்தரவிட்டுள்ளது. மனிதர்களின் உடல்நலத்துக்கு மட்டுமல்லாமல், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என நீதிமன்றம் குறிப்பிட்டது.குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், நீண்ட காலம் பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமிக்கப்படும் நீரில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் கலக்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கவும், மாற்று வழிகளான கண்ணாடி அல்லது ஸ்டீல் பாட்டில்களை பயன்படுத்தவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு மூலம் குடிநீர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

