தமிழ் நடிகர்களுக்கு ரெட் கார்டு; தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காததால், தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு தராத சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகி பாபு ஆகிய 5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்ட் வழங்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் பல்வேறு விஷயங்களுக்கு பொதுக்குழு உறுப்பினர்களிடம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ஒப்புதல் பெற்றனர். அதில் முக்கியமாக தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டும் கால்ஷீட் வழங்காத நடிகர்கள், தயாரிப்பாளர்களை நஷ்டப்படுத்திய நடிகர்கள் என பல தரப்பில் பட்டியல் எடுத்து, அந்த நடிகர்களின் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை (Red Card) என முடிவெடுத்துள்ளனர்.
மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து நடிகர்களில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நிறுவனத்திடம் முன் தொகை பெற்று கால்ஷீட் வழங்கவில்லை என்ற காரணத்திற்காக சிம்புவிற்கு ரெட் கார்ட் விதிக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. அதேபோல் மறைந்த தயாரிப்பாளர் கே.பி. பிலிம்ஸ் பாலுவிடம் முன் தொகை பெற்று அவரின் படத்தில் நடிக்காத காரணத்திற்காக விஷால், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு கால்ஷீட் வழங்காததற்காக எஸ்.ஜே.சூர்யா, தயாரிப்பாளர் மதியழகன் புகாரின் அடிப்படையில் அதர்வா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதைப்போல் யோகி பாபு இது பல தயாரிப்பாளர்கள் புகார் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து முறையான பதில் கொடுத்தால் அவர்களுடைய படங்களுக்கு ஒத்துழைப்பு தருவது என்றும் திருப்திகரமான பதில் அளிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ரெக்கார்ட் விதிப்பது என்றும் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இது தவிர விஷால் தலைமையிலான நிர்வாகத்தினர் தயாரிப்பாளர் சங்கத்தில் நிதியை முறையாக கையாலாத காரணத்திற்காக அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *