டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்த உரையாடலில், உக்ரைன் போரை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என அவர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புளோரிடாவில் உள்ள லாகோ எஸ்டேட்டில் இருந்து ட்ரம்ப், புதினை தொடர்பு கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்று 270 என்ற இலக்கை எளிதாக அடைந்ததால் வரலாற்று வெற்றி அடைந்தார். அவர் ஜனவரி 6-ம் தேதி தனது பதவியை ஏற்க உள்ளார். இதற்கிடையில், உலகத் தலைவர்களுடன் அவர் தொடர்ந்து உரையாடி வருகிறார்.ட்ரம்ப், “அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பல மேற்பட்ட நாடுகளின் தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இந்நிலையில், தற்போது ட்ரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், ட்ரம்பின் பிரதிநிதிகள் இதை உறுதி செய்யவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் உக்ரைன் – ரஷ்யா போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வருவேன் என ட்ரம்ப் கூறியிருந்தார். அந்த வகையில் புதினுடனான அவரது பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.