போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மைப்பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர் .

அரசியல் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு

சென்னையில் ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களை நேற்று இரவு போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சியினரும், போலீசாருக்கும், அரசுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு 6 சிறப்பு திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

1)தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போதி, அவர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால், அதற்கு சிகிச்சை அளிக்க தனித்திட்டம் செயல்படுத்தப்படும்.

2)பணியின் போது மரணம் அடையும் தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

3)தூய்மை பணியாளர்கள் சுய தொழில் தொடங்கும் போது, அவர்களுக்கு ரூ.3.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இந்த புதிய திட்டத்திற்கு ஆண்டுதோறும் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

4)தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கான புதிய உயர் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.

5)நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு வரும் 3 ஆண்டுகளில் 30,000 புதிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.

6)கிராமப்புறங்களில் கருணாநிதி கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஆகிய தூய்மை பணியாளர்களுக்கான 6 சிறப்பு திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அனைவரும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *