வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் ரசிகர்களோடு எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் வைரல்

இசை கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள்

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. நடிகர் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே விஜய் ரசிகர்கள் எல்லோரும் ஆயிரக்கணக்கில் விழாவில் கலந்துகொண்டனர்.
வாரிசு படத்தில் நடித்த மற்றும் பணியாற்றிய பிரபலங்கள் எல்லோரும் விழாவில் கலந்துகொண்டிருக்கின்றனர்.
வழக்கமாக இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொல்லும் குட்டி கதை அவரது ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்நிகழ்ச்சியை தொகுப்பாளினி ரம்யா மற்றும் பிக்பாஸ் வெற்றியாளர் ராஜூ தொகுத்து வழங்கினார்கள்.
இசை வெளியீட்டு விழாவின் இறுதியில் விஜய் மேடையில் ரசிகர்களுடன் Selfie வீடியோ எடுத்து அதை அவரது அதிகாரபூர்வ twitter கணக்கில் வெளியிட்டு இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *