சோழவந்தான் வெற்றிலைக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடூ.

ஆரோக்கியம் இயற்க்கை சிறப்பு செய்திகள் தமிழ்நாடு மண்மணம்

உலகளாவிய அளவில் புகழ்பெற்ற சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதற்கான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவை தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் தலைமையில் வெற்றிலை தபால் உரை வழங்கினார். நிகழ்ச்சியின் அடுத்த கட்டமாக சோழவந்தான் தபால் நிலையத்தில் நடைபெற்றது, இதில் சோழவந்தான் வெள்ளாளர்உறவின்முறை சங்க நிர்வாகிகள் சுகுமார், வெற்றிலை கொடிக்கால்விவசாய சங்க தலைவர் திரவியம் மற்றும் மதுரை தபால் துறை உதவி கோட்ட கண்காணிப்பாளர் ரவிராஜ் ஆகியோர் பங்கேற்றனர். மதுரை கோட்ட உதவி கண்காணிப்பாளர் விஜயலட்சுமி தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. சோழவந்தான் சரக தபால் துறை ஆய்வாளர் மணிவேல் வரவேற்பு வழங்கினார். பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், முன்னாள் கொடிக்கால் விவசாய சங்க தலைவர் ராஜ்குமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்தியபிரகாஷ் ஆகியோர் தபால் உரையை பெற்றுக் கொண்டனர். இத்துடன் தமிழகத்தின் மாநிலப் பறவை மரகதப்புறா மற்றும் பறவைகளின் நிலப்பரப்பு குறித்த பட அஞ்சல் அட்டையும் வெளியிடப்பட்டது.`தமிழகத்தின் இயற்கை அதிசயங்களைப் பிரபலப்படுத்த அஞ்சல் துறை மேற்கொண்டு வரும் முயற்சிகள் மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு இயற்கை அதிசயங்கள், வனவிலங்குகள், பறவைகள், தாவரங்கள் போன்றவை குறித்து பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் எடுத்துச்செல்வது, அவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் வழிவகுக்கும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *