உலக தண்ணீர் தினம்; தண்ணீரின் அவசியத்தை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் அறங்கேற்றிய சிவகங்கை அரசுப் பள்ளி மாணவர்கள்

ஆரோக்கியம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் செய்திகள் தமிழ் பள்ளி நிகழ்வுகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

உலக தண்ணீர் தினம்த்தை முன்னிட்டு கவிதை,பேச்சு,ஓவியம் மூலமாக தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்.
நம்முடைய தலைமுறையினருக்கு சொத்துக்களை சேர்த்து வைக்காவிட்டாலும், நாம் தண்ணீரை சேமித்து வைக்கவேண்டும்.
தேவகோட்டை – உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் கவிதை, குழு பாடல்,பேச்சு மூலமாக தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை வட்டார தோட்டக்கலை அலுவலர் ஜோமி மாணவர்களிடம் பேசுகையில்,மனித வாழ்வில் நாம் அன்றாட தேவைகள் அனைத்திற்கும் நீர் தேவைப்படுகிறது. தண்ணீரே இல்லை என்றால் நாம் அன்றாட தேவைகள் அனைத்தும் பாதிக்கப்படும். நாம் சாப்பிடுவதே கஷ்டமாகிவிடும்.
தென் ஆப்ரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரில் இருக்கும் சகோதர, சகோதரிகள் தண்ணீர் துளியும் கூட இல்லாத நாளை சந்தித்தனர். இதனால் பல இன்னல்களுக்கு ஆளாகினார்கள். நமக்கும் அந்த நிலை வராமல் இருக்க நாம் தண்ணீரை சேமிக்க வேண்டும்.
நம்முடைய தலைமுறையினருக்கு நாம் சேர்த்து வைக்கும், பெரிய சொத்து தண்ணீர் மற்றும் சுத்தமான சுற்றுச்சூழலே ஆகும்.
தண்ணீர் நமக்கு எளிதாக கிடைப்பதால் நமக்கு அதன் அருமை தெரிவதில்லை. தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும்போது தண்ணீரின் முக்கியத்துவம்
தெரிய வரும். 1993 ஆம் ஆண்டு உலக தண்ணீர் தினம் கொண்டாடுவது ஆரம்பிக்கப்பட்டது. பூமியானது 71% நீரினாலும், 29% நிலத்தினாலும் ஆனது .
100% நீரில் 97.5 சதவீதம் நீர் கடல் நீரினால் சூழப்பட்டுள்ளது. மீதமுள்ள 2.5% நீர் நம்முடைய அன்றாடத் தேவைகளுக்கும், விவசாயத்திற்கும் , தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
2.5 சதவீதம் மட்டுமே நன்னீர் ஆகும். அதில் 1.9 சதவீதம் நீர் பணிப் பாறையாக உறைந்து உள்ளது.
நிலத்தடி நீர் 0.5% ஆகும். குளம், குட்டை ஏரிகளில் கிடைப்பது 0.02%. தண்ணீர் மட்டுமே. அதுவே நம்முடைய தேவைகள் அனைத்திற்கும் பயன்படுகிறது.
இதற்காக நாம் நன்றி சொல்ல வேண்டும். மேலும் பூமியின் வளிமண்டலத்தில் 0.001% மற்றும் ஈரப்பதத்தில் 0.00011% இருக்கிறது.
நம் செயல்பாடுகள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் நம் சுற்றுச்சூழலை தாக்கும் உதாரணமாக நாம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும்போது நீர் பூமிக்கு உள்ளே செல்ல முடியாமல் பிளாஸ்டிக் பை தடுக்கிறது. இதனால் ground water recharge தடை செய்யப்படுகிறது.
போன வருடம் தண்ணீர் தினத்தின் தீம் அமைதிக்கான நீர் என்பதாகும். காரணம் நீர் பற்றாக்குறையால் போர் மூலவும் வாய்ப்புள்ளது. எனவே நம் நாடுகளிடையே அமைதி நிலவ நாம் நீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும். நீரை சிக்கனமாய் பயன்படுத்த வேண்டும். இந்த வருடத்தின் தீம் பனி பாறைகளை பாதுகாப்பது. புவி வெப்பமடைவதால் பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இதனால் பனிப்பாறையின் நன்நீர் கடலில் கலக்கப்படுகிறது. சில நேரங்களில் வெள்ளம் வந்து மக்கள் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
புவி வெப்பமடைவதால் நமது நாட்டின் எல்லையில் உள்ள சியாச்சின் பனிப் பாறை ( world highest battle field) உருகி வருகிறது. இதனால் பனிச்சரிவு நிலச்சரிவு ஏற்படும். இதனால் அப்பகுதியில் உள்ள இராணுவ வீரர்கள் மற்றும் மக்கள் பாதிக்கப்படுவார்கள். அங்கு வாழும் மக்கள் இடம் பெயர நேரிடும்.
நாம் தண்ணீரை சேமிப்பதற்கு முக்கியமான வழி என்னவென்றால் மரங்களை அதிகமாக வளர்க்க வேண்டும். பனை மரங்களை வளர்த்தால் மண்ணரிப்பைத் அதிக அளவில் தடுக்கும். இதன் மூலம் மண் அரிப்பினால் ஏற்படும் நீர் மாசுபாட்டை குறைத்து நன் நீரை பாதுகாக்க இயலும்.
பனை மரம் இயற்கையால் தரப்பட்ட மழைநீரை சேமிக்க கூடிய அற்புத மரமாகும். பனை மரத்தால் பல நன்மைகள் உள்ளன. அதில் முக்கியமானது என்னவென்றால் மண் அரிப்பைத் தடுத்து நீரை வேகமாக உறிஞ்சி பூமிக்கு அனுப்பும். விவசாயங்களில் வயல் வரப்பை வெட்டி தண்ணீரை விடுவதற்குப் பதிலாக சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்த வேண்டும். இதனால் தண்ணீரை மிச்சப்படுத்தலாம். தேவையற்ற செடிகள் வளருவது தடுக்கப்படும். மழை நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் பண்னை குட்டை அமைத்து நாம் தண்ணீரை சேமிக்கலாம். நாம் ஒவ்வொருவரும் நம்முடைய அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். காடுகளை அழிக்கக் கூடாது. மரங்கள் இருந்தால்தான் மண்ணரிப்பு தடுக்கப்படும்.என்று பேசினார்.
தண்ணீர் சேமிப்பு தொடர்பாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் விஜய் கண்ணன், ஹாசினி, ரித்திகா, நந்தனா, முகல்யா, ஜாய் லின்சிகா, ஜெபிகா , நவீன், சுபிக்ஷன், ஹனிஸ்கா ஆகியோருக்கு பரிசுகளை வழங்கினார். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் கவிதை, பேச்சு,ஓவியம் மூலமாக தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தேவகோட்டை வட்டார தோட்டக்கலை அலுவலர் ஜோமி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *