விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு அஞ்சல்தலை

கடந்த நிகழ்ச்சிகள் தமிழ்நாடு மற்றவை

தமிழகத்தில் பல அரசர்கள், படைவீரர்கள், படைத்தளபதிகள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியுள்ளனர். அதில் மிகவும் குறிப்படத்தக்க வீரர்களில் ஒருவர் ஒண்டிவீரன். இவரை ஒண்டிவீரன் பகடை என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்.
தென்தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட நெற்காட்டான் செவலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து பாளையக்காரரான பூலித்தேவனின் படையில் இருந்தவர் இந்த ஒண்டிவீரன். பூலித்தேவன் படைத்தளபதியாகவும் இவர் சேவை செய்திருக்கிறார். ஆங்கிலேயர்களை எதிர்த்து அவ்வப்போது தாக்குதல்கள் பல நடத்தியிருக்கிறார். பல தாக்குதல்கள் இவர் ஒண்டியாகச் சென்றே நடத்தியதால் இவரை ஒண்டிவீரன் என்று அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
தமிழக அரசு சார்பில் பல விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மணிமண்டங்கள் கட்டி பெருமைச் சேர்த்தது. அந்த வகையில் 2001ம் ஆண்டு ஓண்டிவீரனுக்கு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 2006ம் ஆண்டு அன்றைய முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
1771ம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஒண்டிவீரன் மரணமடைந்ததாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. அதனால் 2022, ஆகஸ்ட் 20ம் தேதி ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்க தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *