கடும்பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை, அடுத்த நான்கு மாத காலத்திற்கு தேவையான நிதியுதவியை வழங்கி உதவுமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோவிட் தொற்றால் வெளிநாட்டு பயணிகள் வருகை குறைந்து போனதால், அந்நியசெலவானி பாதிக்கப்பட்டு கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அத்தியாவசிய பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இந்தியா ஏற்கனவே 2.4 பில்லியன் டாலர் கடனுதவிகளை வழங்கியுள்ளது.
தொடர்ந்து பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதால், சர்வதேச நாணய நிதியத்துடன் (ஐ.எம்.எப்.,) உதவி கேட்க இலங்கை அரசு குழு அமெரிக்கா விரைந்துள்ளது.
அவர்களிடமிருந்து நிதியுதவி கிடைக்க மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை ஆகலாம் என்பதால் அதுவரை நிதியுதவி வழங்கி உதவுமாறு இந்தியாவிடம் இலங்கை கோரியுள்ளது. பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ள இலங்கையின் கோரிக்கையை ஏற்று இந்தியா உதவி செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன