அமெரிக்காவில் எட்டு முக்கிய நகரங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் முன்னெடுப்பில், அமெரிக்க வாழ் இந்தியர்களுக்காக, இந்த மாதம் 18-ம் தேதி முதல், ஜூலை 9- வரை எட்டு முக்கிய நகரங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சான்பிரான்சிஸ்கோவில், ஜூன் 18ம் தேதியிலும், சியாட்டிலில் 19ஆம் தேதி, டல்லாசில் 25ஆம் தேதி, செயின்ட் லுாயிசில் 26ஆம் தேதி, சிகாகோவில் 30ஆம் தேதி, நியூ ஆர்லியன்சில், ஜூலை 2 ஆம் தேதி, வாஷிங்டனில் 3 ஆம் தேதி மற்றும் அட்லாண்டாவில் 9 ஆம் தேதியும் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருக்கல்யாண உற்சவத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் கட்டணம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியடப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.