சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட ஆக்சியம்-4 குழுவினர் தங்கள் பயணத்தை நிறைவு செய்து பூமிக்கு திரும்புகின்றனர்.
அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின், டிராகன் விண்கலம் வாயிலாக, ஆக்சியம் மிஷன் 4 திட்டத்தில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் கடந்த 25ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். சுமார் 28 மணி நேர பயணத்திற்கு பிறகு கடந்த 26ஆம் தேதி மாலை 4 மணி அளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை இந்த விண்கலம் சென்றடைந்தது.
அதன்பின் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, வெந்தயம், பச்சை பயிர்களை முளைக்கச் செய்வது உள்ளிட்ட மூன்று ஆய்வுகளை மேற்கொண்டார்.
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட ஆக்சியம்-4 குழுவினர் தங்கள் பயணத்தை நிறைவு செய்து பூமிக்கு திரும்புகின்றனர். விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் சில நிமிடங்கள் தாமதமாகப் பிரிந்து பூமிக்குப் பயணத்தைத் தொடங்கினார் சுக்லா.
அன்டாக்கிங் முறையில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து டிராகன் விண்கலம் புறப்பட்டது. அன்டாக்கிங்கிற்கு 10 நிமிடங்கள் ஆனது. வெற்றிகரமாக அன்டாக்கிங் செய்யப்பட்ட பூமியை நோக்கி டிராகன் விண்கலம் புறப்பட்டது. இதில் பைலட்டாக இருந்து டிராகனை பூமி நோக்கி இயக்கி வருகிறார் சுபான்ஷூ சுக்லா.
கிட்டத்தட்ட 22 மணி நேரம் பயணம் செய்யவிருக்கிறது. அதன்படி அமெரிக்காவின் புளோரிடா மாகாண கடல் பகுதியில் டிராகன் விண்கலம் நாளை (ஜூலை 15) தரையிறங்க உள்ளது. நாளை மாலை 3 மணிக்கு புளோரிடா கடற்கரையில் ஆக்சியம் 4 டிராகன் தரையிறங்குகிறது. மொத்தமாக 18 நாள் 7 மணி நேரம் விண்வெளியில் ஆய்வு செய்த நிலையில் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா நாளை பூமிக்கு திரும்புகிறார்.

