அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ‘ஆக்சியம் -4’ மனித விண்வெளி பயணத்திற்கான ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த திட்டத்தின் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகிய 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி புறப்பட்டனர். 14 நாள்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து, நுண்ஈர்ப்பு விசை சூழலுக்கு ஏற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் வரும் ஜூலை 13-ந் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டு வருகிற 14-ந்தேதி சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புகின்றனர் என்ற இந்த தகவலை நாசா – இஸ்ரோ தெரிவித்துள்ளது.

