உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரில் குகேஷ் மற்றும் டிங் லிரென் மோதிய போட்டி, டிராவில் முடிந்தது.

இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் விளையாட்டு

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் உள்ள ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் நேற்று ஆரம்பமாகியது. இதில், தற்போதைய சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான டி.குகேஷ் எதிர்கொண்டார். முதல் சுற்றில், குகேஷ் வெள்ளை காய்களுடன் மற்றும் டிங் லிரென் கருப்பு காய்களுடன் விளையாடினார்கள்.இன்று நடந்த இரண்டாம் சுற்றில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ் டிரா செய்துள்ளார். நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் தற்போதைய சாம்பியன் டிங் லிரெனிடம் தோல்வியடைந்த குகேஷ், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சமநிலையை ஏற்படுத்தினார். போட்டியின் 23வது நகர்த்தலில் இருவரும் டிரா செய்ய ஒப்புக்கொண்டனர். மொத்தமாக 14 போட்டிகளில், முதலில் 7.5 புள்ளிகளை பெற்றவர் உலக சாம்பியன் பட்டத்தை வெல்லவுள்ளார். தற்போது, டிங் லிரெனுக்கு 1.5 புள்ளிகள் மற்றும் குகேஷ்க்கு 0.5 புள்ளிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *