ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனை படைத்த சன்ரைசரஸ் ஹைதராபாத்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

மும்பை அணிக்கு எதிராக ஐதராபாத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 277 ரன்கள் குவித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2013-ல் நடந்த போட்டியின்போது புனே அணிக்கு எதிராக 263 ரன்கள் எடுத்திருந்தது. இதுவே உச்சமாக இருந்த நிலையில் அதனை சன்ரைசர்ஸ் முறியடித்துள்ளது.
சன்ரைசர்ஸ் அணியின் டிராவிஸ் ஹெட், அபிசேக் சர்மா, ஹெய்ன்ரிச் கிளாசன் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் மும்பை அணியின் பவுலிங்கை வெளுத்தெடுத்தனர். இரு அணிகளும் இந்த தொடரில் முதல் வெற்றியை பெறாத நிலையில் இன்று வெற்றி பெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். தற்போது 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணி வீரர்கள் களம் இறங்கியுள்ளனர். வெற்றி பெற்று புதிய சாதனையை மும்பை அணி ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *