கர்நாடகாவில் விஷத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் மற்றும் அதன் விதைகளை ஆன்லைனில் விற்பனை செய்ததாக கூறி, அமேசான், ஸ்விகி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் நிறுவனங்களுக்கு எதிராக உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.பொதுமக்களின் உடல்நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தப் பொருட்களை ஆன்லைன் தளங்களில் இருந்து உடனடியாக நீக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஊமத்தங்காய் மற்றும் அதன் விதைகளை தவறாக உட்கொண்டால் விஷத்தன்மை காரணமாக உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால், பொதுமக்கள் அவற்றை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

