வந்தே பாரத்: பயணிகள் வசதிக்கான புதிய முயற்சி

இந்திய வணிகம் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு மற்றவை முதன்மை செய்தி

படுக்கை வசதியுள்ள, ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்க திட்டம்.வந்தே பாரத்’ ரயில்களின் தயாரிப்பு பணிகள் முடிந்ததால், பெங்களூரில் இருந்து சென்னை ஐ.சி.எப். ஆலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இதற்கான பல கட்ட சோதனைகள் விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 55 வழித்தடங்களில் 110 ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்த ரயில்களில் ‘சேர் கார்’ மற்றும் ‘எக்சிகியூடிவ் சேர் கார்’ என இரண்டு வகை இருக்கைகள் உள்ளன. ஆனால், பயணிகள் நீண்ட நேர பயணத்திற்கு இந்த இருக்கைகள் மிருதுவாக இல்லாமல், மிகவும் கடினமாக இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் சிரமத்தை அனுபவிக்கிறார்கள்.இதற்கான தீர்வாக, ரயில்வே படுக்கை வசதியுடன் கூடிய சிலீப்பர் ‘வந்தே பாரத்’ ரயில்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இவை இரவு நேரங்களில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் பயணிகள் மேலும் வசதியாக பயணம் செய்ய முடியும்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பி.இ.எம்.எல். நிறுவனத்தில், கடந்த ஆண்டு முதல் சிலீப்பர் வந்தே பாரத் ரயிலின் தயாரிப்பு பணிகள் தொடங்கின. இப்போது அந்த பணிகள் முடிந்துள்ளதால், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த வாரம் அந்த பெட்டிகளை ஆய்வு செய்தார். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, இந்த ரயில் பயணிகளை மிகவும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை விரைவில் சென்னை ஐ.சி.எப். ஆலைக்கு கொண்டு செல்லவுள்ளனர். அங்கு, ரயில் பாதையில் இயக்கி, பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம், ரயிலின் செயல்திறனை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆய்வுகள் முடிந்த பிறகு, வேகமாக சோதனை ஓட்டம் நடத்தப்படும். ரயிலின் இயக்கம், தொழில்நுட்ப திறன் மற்றும் பயணியர் வசதிகள் குறித்து வல்லுனர்கள் குழு ஆய்வு செய்து, சோதனை அறிக்கையை ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் சமர்ப்பிக்கும். அவரின் ஒப்புதல் பெற்ற பிறகு, ரயில் பயணிகள் சேவைக்கு தயாராகும் என தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *