கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி நிறுவனம் சார்பில் கால்வாய் வெட்டும் பணிக்காக பல ஏக்கர் பரப்பளவிலான நெற் பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வாய்க்கால் பணியை தொடர்வதற்காக, நெல் பயிரிட்டுள்ள நிலங்களில் நவீன இயந்திரங்கள் மூலம் வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 30 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
என்எல்சி நிறுவனத்துக்கு எதிராக காலையிலிருந்து பல்வேறு இடங்களில் பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சேத்தியாத்தோப்பு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் லாரி டயருக்கு தீ வைத்து கொளுத்தி சாலையில் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெய்வேலி அருகே கன்னிதோப்பு பாலத்தில் மர்ம நபர்கள் டயரை கொளுத்திச் சென்று உள்ளனர்.
அதேபோல் பண்ருட்டியில் இருந்து காடாம்புலியூர் வழியாக சென்ற அரசு விரைவு பேருந்து மீது கொஞ்சி குப்பம் என்ற கிராமத்தில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அரசு பேருந்து மீது கல் வீசியதில் பேருந்தில் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது இரண்டு இடங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
