வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி தமிழக இளைஞர்களை பல்வேறு நாடுகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லாமல், வழிமுறைகளை பின்பற்றாமல் அனுப்பி வைத்து அவர்களை சட்டவிரோத கும்பல்களிடம் மாட்டிவிடுவது வாடிகௌகையாகிவிட்டது. இதே போன்று சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 6 தமிழக இளைஞர்களை கம்போடியா நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கம்போடியா நாட்டிற்கு சென்றவுடன் காத்திருந்தது அவர்களுக்கு பேரதிர்ச்சி. சட்டவிரோத சீனக் கும்பலிடம் மாட்டிக்கொண்டு பல சட்டவிரோத செயர்களைச் செய்யச்சொல்லி அவர்களை துண்புறுத்திருக்கின்றனர். நிலைமை எல்லை மீறவே கம்போடிய தமிழ்ச் சங்கத்தினை நாடி உதவிக் கோரியுள்ளனர். அங்கிருந்த அங்கோர் தமிழ்ச் சங்கம் உடனடியாக தமிழக அரசிடம் உதவும்படி கோரிக்கை வைத்துள்ளது. உடனடியாக இதனை ஏற்ற சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி மஸ்தான் உடனடியாக களத்தில் இறங்கினார். தமிழக அரசின் முயற்சியால் அவ்விளைஞர்கள் சென்னை விமான நிலையம் வந்தடடைந்து அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.