ஆன்லைன் ரம்மி, இன்னும் பல சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் முதன்மை செய்தி விளையாட்டு

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்களில் விளையாடினால் அல்லது சூதாட்டம் நடத்தினால் 5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். சில விளக்கங்களையும் கேட்டிருந்தார். இதையடுத்து ஆளுநர் கேட்ட விளக்கங்களுடன் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
2-வது முறையாக அனுப்பப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்தது. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு சற்றுமுன் ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடும் நபர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்க தடை சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *