தேசிய குடும்ப நல ஆய்வின் ஐந்தாவது சுற்று தேசிய அறிக்கை நேற்று வெளியானது.
அதில் ரத்த உறவுகளுக்குள் நிகழ்த்தப்பெறும் திருமணங்களில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 28 சதவீத மக்கள் ரத்த உறவுகளுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்துள்ளது.
இந்த ரத்த உறவு திருமணங்கள் மூலம் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனை தடுக்க ரத்த உறவு முறை திருமணங்களை தவிர்க்க வேண்டும் அதை தொடர்ந்து கர்நாடகா 27 சதவீதமும், ஆந்திராவில் 26 சதவீதமும், புதுச்சேரியில் 19 சதவீதமும், தெலுங்கானாவில் 18 சதவீதமும் ரத்த உறவு திருமணங்கள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரத்த பந்தங்களுக்குள் திருமணம் மேற்கொள்வதால் பிறவிக்கோளாறு முதல் மரபணு கோளாறு வரை பல உடல்நல சீர்கேடுகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.