கால்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒருவராக கொண்டாடப் பட்டவர் அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த மாரடோனா. 1986ல் நடைபெற்ற உலகப் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதிய போட்டியில் மரடோனா 2 கோல் அடித்தார். அதில் ஒரு கோல் அவரது கையில் பட்டு கோல் போஸ்ட்டுக்குள் நுழைந்தது. அந்த நிகழ்வை கடவுளின் கை என அப்போது மரடோனா வருணித்திருந்தார்.
அந்த போட்டியில் மரடோனா அணிந்திருந்த டி-ஷர்ட் இங்கிலாந்து வீரரான ஸ்டீவ் ஹாட்ஜ் வசம் இருந்தது. அது கடவுளின் கை டி-ஷர்ட் என பிரபலமடைந்திருந்தது. அது தற்போது ஏலத்திற்கு வந்திருந்தது.
பலரும் அதை ஏலம் எடுக்க போட்டி போட்டு ஆர்வம் காட்டினர். இறுதியில் இது ரூ.70 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக நியூயார்க் யாங்கீஸ் பேஸ்பால் அணியின் பழம்பெரும் வீரர் பேபி ரூத்தின் விளையாட்டு ஆடை ரூ.40 கோடிக்கு ஏலம் போனது தான் இதுவரையிலான அதிகபட்ச தொகையாக விளையாட்டு உலகில் அறியப்பட்டு வந்திருந்தது. அந்த சாதனையை தற்போது மாரடோனாவின் கடவுளின் கை டி-ஷர்ட் முறியடித்துள்ளது.