நாடாளுமன்றம் அருகே ஏற்பட்ட திடீர் போராட்டத்தால் நுழைவாயில்கள் மூடப்பட்டன.

அரசியல் இந்தியா செய்திகள் முதன்மை செய்தி

டெல்லியில் நாடாளுமன்ற வளாகம் அருகே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம் காரணமாக பரபரப்பான சூழல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்றதால், அவர்களை தடுக்க காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியது. மேலும், கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன.நாடாளுமன்ற வளாகம் முழுவதும் ஆயுதம் ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரிசர்வ் வங்கி அலுவலகம் அருகே திரண்ட போராட்டக்காரர்கள், ஒன்றிய அரசுக்கு எதிராகவும், நீட் தேர்வு முறைகேடு விவகாரத்திற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.இதற்கிடையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், போராட்டத்தின் எதிரொலியாக தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *