ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான மேட்ச் லக்னோவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்றுள்ள சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. முதல் இன்னிங்ஸில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது. ரன் எடுப்பதில் வேகம் காட்டிய சென்னை அணி வீரர்கள் நிதானமாக விளையாடினர். சென்னை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஷேக் ரஷித் 27 ரன்கள் எடுத்திருந்தபோது ஆவேஷ் கான் வீசிய 5 ஆவது ஓவரின் 5 ஆவது பந்தில் நிகோலஸ் பூரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
17 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. வெற்றிக்கு 18 பந்துகளில் 31 ரன்கள் தேவை என்றபோது 19.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. துபே 43 ரன்களுடனும், தோனி 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
