சர்வதேச அளவில் சிறந்த திரை படைப்புகளுக்கும் திரை கலைஞர்களுக்கும் அமெரிக்காவில் உள்ள அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுகளை வழங்கி வருகிறது. இது, உலகிலேயே தொலைக்காட்சி மூலம் அதிகமானோர் பார்வையிட்ட விருது வழங்கும் விழாக்களில் முதன்மையானதாக இருந்து வருகிறது.
அந்த வகையில், அமெரிக்காவின் ABC தொலைக்காட்சி 2028 வரை ஒளிபரப்பு உரிமம் வைத்துள்ளது. இந்த நிலையில், 2029 முதல் 2033 வரையிலான ஆஸ்கார் ஒளிபரப்பு உரிமத்தை முதல்முறையாக ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான YouTube வாங்கி உள்ளது.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க இந்த முயற்சி உதவும் என்று அகாடமியின் தலைவர் லினெட் ஹோவெல் டெய்லர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பில் கிராமர் தெரிவித்துள்ளனர்.

