தீபாவளி அன்று 29 லட்சம் விளக்குகளை ஏற்ற தயாராகும் அயோத்தி நகரம்.

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கோயில்கள் சிறப்பு செய்திகள் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள்

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தியில் லட்சக் கணக்கில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு வருகின்றன. இது உலக சாதனையாகவே பதிவாகி வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 19-ம் தேதி 9-வது ஆண்டு தீப உற்சவம் நடைபெற உள்ளது. இவ்விழாவை உ.பி. அரசு சார்பில் அயோத்தியின் ராம் மனோகர் லோகியா அவத் பல்கலைக்கழகம் நடத்த உள்ளது.இதில், 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதன்முலம் கடந்த ஆண்டின் (26 லட்சம் அகல் விளக்குகள்) சாதனை முறியடிக்கப்பட உள்ளது என கூறப்படுகிறது. இவ்விளக்குகள் சரயு நதியின் 56 கரைகள், ராம் கீ பேடி, நகரின் இதரக் கோயில்கள் மற்றும் குடியிருப்புகளில் ஒளிர உள்ளன.மேலும் 1,100 டிரோன்கள் வானில் தீபாவளிக்காக பறக்கவிடப்பட உள்ளன. இவற்றில் ராமாயணத்தின் காட்சிகள் ஒளிப்படங்களாக சித்தரிக்கப்பட உள்ளன என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *