அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய அறிவிப்பு. அதிக வருமானம் பெறுபவர்களைத் தவிர, பிற அனைத்து அமெரிக்க குடிமக்களுக்கும் $2,000 (சுமார் ரூ.1.77 லட்சம்) வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.இந்த நிதி உதவி திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சி பெறச் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாகும். உலக சந்தையில் பிற நாடுகளுக்கு விதிக்கப்படும் வரிகளிலிருந்து (tariffs) கிடைக்கும் வருவாயை மக்களிடையே பகிர்வதே இதன் நோக்கமாகும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அத்துடன், இந்த தொகை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும், இதன் மூலம் குடும்பங்கள், சிறு தொழில்கள், மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்கள் பெரிதும் பயன்பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது .இது தொடர்பான விரிவான திட்டம் விரைவில் காங்கிரஸில் முன்வைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

