உலக சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு 30 நாள் அனுமதி: அமெரிக்கா அறிவிப்பு, ஈரான் மறுப்பு

அரசியல் இந்திய வணிகம் இந்தியா உலகம் செய்திகள் பொருளாதாரம் முதன்மை செய்தி

உலகளவில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா ஈரானின் கச்சா எண்ணெயை 30 நாட்களுக்கு உலக சந்தையில் விற்க அனுமதி அளித்துள்ளது. அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்த நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் இந்த தளர்வை வழங்கியுள்ளது. இதன் மூலம் கடல் வழியாக கப்பல்களில் இருக்கும் சுமார் 14 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால், இந்த அனுமதியின்போதும் ஈரான் கச்சா எண்ணெயை விற்க மறுத்துள்ளது. தங்களிடம் கூடுதல் கச்சா எண்ணெய் இருப்பு இல்லை என்பதால், சர்வதேச சந்தைக்கு வழங்க முடியாது என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதே நேரத்தில், இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவில் அமைந்துள்ள அமெரிக்கா–பிரிட்டன் ராணுவத் தளத்தை நோக்கி ஈரான் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலைமை உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *