பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா2 திரைப்படம்; பிரம்மாண்ட விழாவில் ட்ரெய்லர் வெளியானது

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் சினிமா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் உருவாகி வருகிறது.
‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. ‘புஷ்பா’ படத்தில் ‘ஊ சொல்றியா’ என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தநிலையில், புஷ்பா -2 படத்தில் நடனமாட நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தமாகி இருக்கிறார். அவர் நடனமாடும் அந்த பாடலுக்கு ‘கிஸ்சிக்’ என பெயரிடப்பட்டுள்ளது.
டிரெய்லர் வெளியீட்டு விழா பாட்னாவில் நடைபெற்றது. விழாவில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடியான சண்டைக்காட்சிகளும் முதல் பாகத்திற்கான தொடர்புகளை நினைவுப்படுத்தும் காட்சிகளும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்படத்தை டிசம்பர் 5ம் தேதி உலகளவில் 11,000 திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *