பாஸ்போர்ட்களில் ஆண் மற்றும் பெண் என இரு பாலினங்களை மட்டுமே இடம்பெறும் அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.

அமெரிக்கா அரசியல் உலகம் சிறப்பு செய்திகள் நீதி மன்றம்

டிரம்ப் நிர்வாகம் வெளியிட்ட பாஸ்போர்ட் பாலின கொள்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது அமெரிக்க உச்ச நீதிமன்றம் . இந்த கொள்கையின்படி, பாஸ்போர்ட்களில் ஆண் (M) அல்லது பெண் (F) என்ற இரு பாலினங்களையே குறிப்பிட முடியும். முன்னதாக, கீழ் நீதிமன்றம் வெளிவிவகாரத் துறைக்கு “M, F, அல்லது X” என மூன்று தேர்வுகளை வழங்க உத்தரவிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவை நிறுத்தி, டிரம்ப் நிர்வாகம் தன் கொள்கையை தொடர அனுமதித்துள்ளது.இந்த முடிவு, திருநங்கைகள் மற்றும் பிற பாலின அடையாளம் கொண்டவர்களின் உரிமைகள் குறித்து கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள், பிறந்தபோது பதிவான பாலினத்தை மட்டுமே அங்கீகரிக்கும் இந்த கொள்கை தங்களின் அடையாளத்தை மறுக்கும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *