தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை – நடுத்தர மக்களின் கனவில் பேரிடி

Nri தமிழ் வணிகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் முதன்மை செய்தி

நகைப் பிரியர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை உயர்விலேயே இருந்து வருகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ச்சியாக உயர்வது நடுத்தர மக்களின் நகை சேமிப்பு கனவை தகர்ப்பதாக அமைகிறது.
தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் சரிவு நிலையை கண்டது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.110 உயர்ந்து 5,560 ரூபாய் எனவும், சவரன் ஒன்றுக்கு ரூ.880 வரை உயர்ந்து 44,460 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
18 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.90 உயர்ந்து 4,554 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு ரூ.720 வரை உயர்ந்து 36,432 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 74.40 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி 74,400 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *