தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு வெனிசுலா. இந்த நாட்டில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுட்டுள்ளன.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தகவலின்படி, நாட்டின் தலைநகர் கராகஸுக்கு மேற்கே சுமார் 284 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சான் பெலிப் அருகே இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. ரிக்டரில் இந்த நிலநடுக்கம் 7.2 ஆக பதிவாகியுள்ளது.
தொடர்ந்து சரியாக 39 வினாடிகள் கழித்து, தலைநகருக்கு மேற்கே சுமார் 293 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யூமாரே அருகே, 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் சுமார் 13 கிலோமீட்டர் ஆழத்திலும் இரண்டாவது 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அச்சத்தினால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெனிசுலாவைத் தாக்கிய மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் இதுவாகும்.
வெனிசுலாவின் உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ நாட்டின் பல பிராந்தியங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும், மேலும் அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்தார். மக்கள் விடுகளை விட்டு வெளியே இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

