வியட்நாம் படகு விபத்து சோகம்: உயிரிழந்த 10 தமிழர்களுக்கு இறுதி அஞ்சலி ஏற்பாடு!

இந்தியா உலகம் சிறப்பு சுற்றுலா செய்திகள் தமிழ்நாடு மறைவு/இரங்கல் விபத்துகள்

வியட்நாட்டில் ஏற்பட்ட துயரமான படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் இன்று இரவு மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட உள்ளன. இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக கொண்டு சென்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. மும்பை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மற்றும் அரசு அதிகாரிகள் மூலம் உடல்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசுடன் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என தமிழக அரசு உறுதியளித்துள்ளது.வியட்நாட்டில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு பயணமாக சென்றிருந்தபோது இந்த படகு விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்திற்கான காரணம் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *