தமிழ் மொழியே உலகின் பழமையான மொழி; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ் சங்கங்கள் தமிழ்க்கல்வி தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

உலகம் முழுவதும் தமிழ் மொழியை கற்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
117வது மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் என்பது இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் பெருமை என்றார். கடந்த மாதம் ஃபிஜி நாட்டில், இந்திய அரசின் துணையுடன் தமிழ் மொழியை கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டதாகவும், கடந்த 80 ஆண்டுகளில் முதன்முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஃபிஜி நாட்டில் தமிழ் மொழியை கற்றுக் கொடுக்கின்றனர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
தமிழ் மொழி மற்றும் பாரம்பரியத்தைக் கற்றுக் கொள்ள ஃபிஜி நாட்டு மக்கள் காட்டும் ஆர்வம் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *