கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் விராட் கோலி தற்போது இன்ஸ்டாகிராம் பதிவிலும் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு விராட் கோலி தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்.. “இதைவிட சிறந்த நாளைக் கனவில்கூட கண்டிருக்க முடியாது. கடவுள் மிகப் பெரியவர், நன்றியுடன் தலை வணங்குகிறேன். இறுதியாக நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம். ஜெய்ஹிந்த்..!” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவுக்கு 1 கோடியே 64 லட்சத்துக்கும் அதிமான லைக்குகள் பதிவாகியுள்ளன.
விராட் கோலிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தை 26 கோடிக்கும் மேல் பின் தொடர்கின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவில் இன்ஸ்டாகிராமில் அதிகம் விரும்பப்பட்ட பதிவு, வேகமான 10 லட்சம் லைக்குகள் பெற்ற பதிவு, அதிவேக 50 லட்சம் லைக்குகள் பெற்ற பதிவு, ஆசியாவிலேயே அதிவேக 50 லட்சம் லைக்குகள், ஆசியாவில் அதிகம் பின்தொடர்பவர்கள் போன்ற சாதனைகளையும் படைத்துள்ளார் விராட் கோலி. இதற்கு முன்னதாக நடிகை கியாரா அத்வானியின் திருமணப் பதிவுக்கு 1 கோடியே 62 லட்சம் லைக்குகள் வந்ததே சாதனையாக இருந்த நிலையில் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

