ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை, யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தால் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய திட்டம் 2004 முதல் ஓய்வு பெற்ற, புதிய ஒய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள், ஓய்வு பெறுவதற்கு முன்பாக, கடைசி 12 மாதங்களில் வாங்கிய சம்பளத்தின் 50% ஓய்வூதியமாக வழங்குவதை இந்த திட்டம் உறுதி செய்கிறது.அரசு ஊழியர் இறந்தால், குடும்பத்திற்கு அவரின் ஓய்வூதியத்தின் 60% குடும்பத்திற்கு வழங்கப்படும்.குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு, ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்குவதை உறுதி செய்கிறது.தற்போது இருக்கும் ஒய்வூதிய திட்டத்தின்படி, ஊழியர்கள் 10% பங்களிக்க வேண்டும். அரசின் பங்களிப்பு 14 சதவிகிதம் ஆகும். தற்போதைய யூபிஎஸ் – ஒருங்கிணைந்த ஒய்வூதிய திட்டத்தில் அரசின் பங்களிப்பு 18 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.