சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த 6.50 கோடி ரூபாய் மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது.
மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், பள்ளிகூட வளாகத்தை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரவும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் கல்வித் துறையின்கீழ், 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில் சென்னை மாநகராட்சியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி சென்னை மாநகராட்சியின் விரிவாக்கத்திற்கு முன்னர், 15 மண்டலங்களில் உள்ள இருந்த 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த 6.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், பள்ளிகூட வளாகத்தை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரவும் சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
