இலங்கை கிரிக்கெட் வீரர் மைதானத்தில் நுழைய தாமதமானதால் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார்; கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதன்முறை

இந்தியா இலங்கை உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு வினோதங்கள்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் தாமதமாக பேட்டிங் செய்ய வந்ததால் இலங்கை வீரர் அவுட் செய்யப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தாமதமாக வந்ததற்காக ஒரு வீரருக்கு அவுட் கொடுத்தது இதுவே முதல்முறை ஆகும். இலங்கை அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தாமதமாக களமிறங்கியதற்காக நடுவர் அதிரடியாக அவுட் கொடுத்தார். 3 நிமிடங்களுக்குள் ஏஞ்சலோ மேத்யூஸ் மைதானத்துக்குள் வரத் தவறியதால் நடுவர் அவருக்கு அவுட் கொடுத்தார்.
3 நிமிடங்களுக்குள் களத்தில் இறங்கிய போதிலும் அவரது தலைக் கவசத்தில் உள்ள பட்டை சரியாக வேலை செய்யாததால் வேறு ஒரு தலைக்கவசம் கொண்டு வர கோரினார். சரியான ஹெல்மெட்டை இன்னொரு வீரர் எடுத்து வருவதற்குள் 2 நிமிடத்திற்கு மேல் ஆனது. அதற்குள் வங்கதேச அணியினர் மேத்யூஸ் தாமதமாக களமிறங்கியதற்காக அவருக்கு அவுட் கொடுக்க கோரினர்.
வங்கதேச அணியினரின் கோரிக்கையை பரிசீலித்து விதிப்படி நடுவர் மேத்யூஸுக்கு அவுட் கொடுத்தார். நீண்ட நேரம் நடுவரிடம் வாதம் செய்தபோதும் அவுட் முடிவில் இருந்து நடுவர் பின் வாங்கவில்லை. ஒரு விக்கெட் விழுந்ததும், 120 நொடிகளுக்குள் அடுத்த வீரர் களமிறங்க வேண்டும் என்பது ஐசிசி விதி. 146 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *