ஹேமா கமிட்டியின் தாக்கம்: திரையுலகில் புதிய அலை

இந்தியா சிறப்பு சினிமா செய்திகள் மற்றவை முதன்மை செய்தி

நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதும், திரையுலகினர் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மோசமான பாலியல் அனுபவங்களை சந்தித்த சில நடிகைகள் தற்போது தங்கள் வாழ்கையில் நடந்ததை பகிர்ந்து வருகின்றனர்.

ஹேமா கமிட்டி ஐந்து ஆண்டுகளாக மலையாள சினிமாவில் உள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து வருகிறது, இந்த அறிக்கையை வெளிவர ரேவதி மற்றும் பார்வதி போன்ற நடிகைகள் உதவினார்கள்.

இதனால் பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பிரச்சனைகளை பேச ஆரம்பித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை விசித்திரா தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர் ஒருவரிடமிருந்து தனக்கு பாலியல் தொல்லைகள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

திரைப்பட உலகில் பலர் “அட்ஜஸ்ட்” செய்யவோ அல்லது வேலையைப் பெறுவதற்காக தங்களை மாற்றிக் கொள்ளவோ நிர்பதிக்கப்படுகின்றனர். அது மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகவும் விசித்திரா விளக்கினார்.

ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட் செய்து கொள்ளச் சொல்கிறார்கள் என்று பல நடிகைகள் இப்போது தைரியமாகப் பேசி வருகிறார்கள்.

நடிகர் சங்கத்தில் உள்ளவர்கள், உங்களின் சக கலைஞர்களாக வேலை செய்யும் நடிகைகளுக்கு பாலியல் பிரச்சனை வந்தால் ஏன் அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து சரி செய்ய முன்வர மறுக்கீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு நடிகர் சங்கத்தின் சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைக்கு நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருக்கும் விஷால், கார்த்தி மாதிரியான இளைஞர்களாவது இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

நடிகைகளை தவறாக அணுகினால் சங்கத்தில் வந்து புகார் கொடுக்கலாம் என பெண்களுக்கு வெளிப்படையாக தைரியம் கொடுக்க வேண்டும் .

அது போல பெண்களுக்கு சம்பந்தப்பட்ட ஆண்கள் கிட்ட இருந்து பாதுகாப்பையும் உறுதிப்படுத்தனும்.

திரைத்துறையில் பல பெண்கள், நடிகைகளின் பாலியல் சீண்டலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று குரல் கொடுத்தால், அவர்களுடன் இணைந்து நானும் குரல் கொடுப்பேன் என்று விசித்திரா பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *