
கனமழையால் பெங்களூரு முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதிக தண்ணீர் தேங்கியுள்ளதால் முக்கியமான சாலைகளில் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் பெங்களூரு நகரின் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மழையினால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, இதனால் நகரத்தை சுற்றி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பெங்களூரு போக்குவரத்து போலீசார், ஈரமான சாலைகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கூட்ட நெரிசலில் போது, பயணி ஒருவர் X தளத்தில் தனது சிரமங்களைப் பதிவுசெய்து, எலக்ட்ரானிக் சிட்டியிலிருந்து சில்க் போர்டுக்கு செல்ல காலை 5 மணிக்குப் பேருந்தில் ஏறியதாகவும், 8 மணிமாகியும் அவர் சேருமிடத்திற்கு செல்லமுடியவில்லை எனவும், மிகுந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்ததாக தெரிவித்தார்.
ஓசூர் நகரின் வழித்தடத்தில் தேங்கி உள்ள நீர் காரணமாக போக்குவரத்து ஆலோசனையை வழங்கிய மடிவாளா போக்குவரத்து காவல் நிலையத்தின் X இல் , இடுகை – ஓசூர் மெயின் ரோட்டில் பொம்மனஹள்ளி முதல் சில்க் போர்டு சந்திப்பு வரையிலும், சில்க் போர்டு சந்திப்பிலிருந்து பொம்மனஹள்ளி ரூபன அக்ரஹாரா வரையிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால், பயணிகள் வேறு வழியில் பயணிக்கவும் என தெரியப்படுத்தி உள்ளனர்.
சாலையை சமாளிக்க முடியாமல் வாகனங்கள் திணறுவது போன்ற பல படங்களும் வீடியோக்களும் வலைதளங்களில் பதிவாகியுள்ளன. மற்றும் நகரத்திற்கு வெளியே, மக்கள் மாற்று சாலைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.